என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "தர்ம அடி"
- அக்கம்பக்கத்தினர் அங்கு வந்து திரண்டு வந்து செல்போன் திருட முயன்ற நபரை மடக்கி பிடித்தனர்.
- அசோக்கை கைது செய்த போலீசார் கோர்ட்டில் ஆஜர்படுத்தி காலாப்பட்டு ஜெயிலில் அடைத்தனர்.
புதுச்சேரி:
அசாம் மாநிலத்தை சேர்ந்தவர் பிருந்தால் மண்டல். இவர் புதுச்சேரி சேதராப்பட்டில் வீடு வாடகை எடுத்து தங்கி, அதே பகுதியில் உள்ள தனியார் தொழிற்சாலையில் பணிபுரிந்து வருகிறார்.
இந்நிலையில் பிருந்தால் மண்டல் நேற்று மதியம் காற்றுக்காக வீட்டின் கதவை திறந்து வைத்து விட்டு தூங்கினார். அப்போது ஒரு மர்ம நபர் பிருந்தால் மண்டலின் செல்போனை திருட முயன்றார். சத்தம் கேட்டு கண்விழித்த பிருந்தால் மண்டல் இதை பார்த்து திடுக்கிட்டு கூச்சலிட்டார்.
உடனே அக்கம்பக்கத்தினர் அங்கு வந்து திரண்டு வந்து செல்போன் திருட முயன்ற நபரை மடக்கி பிடித்தனர்.
பின்னர் அந்த நபரை முட்டி போட வைத்து தர்ம அடி கொடுத்தனர். தொடர்ந்து, அந்த நபரை சேதராப்பட்டு போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர்.
போலீசார் விசாரணை செய்ததில் அவர், திண்டிவனம் சிங்கனூர் புது காலனி விநாயகர் கோவில் தெருவை சேர்ந்த அசோக் என்பதும், இவர் மீது சென்னை, விக்கிரவாண்டி மற்றும் வானூர் உள்ளிட்ட பகுதிகளில் செல்போன் திருட்டு வழக்குகள் நிலுவையில் இருப்பது தெரிய வந்தது.
மேலும் அசோக் தான் வசிக்கும் பகுதி அருகே அவர் டிபன் கடை நடத்தி வருவதும், பண தேவைக்காக பகுதி நேரமாக இதுபோல் செல்போன் திருட்டில் ஈடுபட்டு வந்ததும் விசாரணையில் தெரியவந்தது.
தொடர்ந்து அசோக்கை கைது செய்த போலீசார் கோர்ட்டில் ஆஜர்படுத்தி காலாப்பட்டு ஜெயிலில் அடைத்தனர்.
இதற்கிடையே, செல்போன் திருடனை பொதுமக்கள் பிடித்து முட்டி போட வைத்து தர்ம அடி கொடுத்த வீடியோ காட்சி சமூக வலைதளத்தில் வைரலாக பரவி வருகிறது.
- மூர்த்தி (21). இவர் சேலம் இரும்பாலை அருகே உள்ள அட்டை கம்பெனியின் வேலை பார்த்து வருகிறார்.
- இவருக்கு அதே பகுதியைச் சேர்ந்த 16 வயது மாணவியுடன் பழக்கம் ஏற்பட்டது.
சேலம்:
நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு வரச்சிபாளையத்தைச் சேர்ந்தவர் மூர்த்தி (21). இவர் சேலம் இரும்பாலை அருகே உள்ள அட்டை கம்பெனியின் வேலை பார்த்து வருகிறார். இவருக்கு அதே பகுதியைச் சேர்ந்த 16 வயது மாணவியுடன் பழக்கம் ஏற்பட்டது. நேற்று நள்ளிரவில் மாணவி வீட்டின் அருகே இருவரும் பேசிக் கொண்டிருந்தனர். இதை அந்த வழியாக வந்த மாணவியின் உறவினர்கள் பார்த்து விட்டனர். இதையடுத்து வாலிபரை பிடித்து மரத்தில் கட்டி வைத்து தர்ம அடி கொடுத்தனர். இது குறித்து தகவல் அறிந்து இரும்பாலை போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று மாணவி உறவினர்களிடம் பேசி வாலிபரை மீட்டு போலீஸ் நிலையம் அழைத்து சென்று விசாரணை நடத்தி வருகின்றனர்.
- சவுந்தர்ராஜன், தனது குடும்பத்தினருடன் காரில் சென்றார்.
- சவுந்தர்ராஜன் மற்றும் அவரது குடும்பத்தார் ஒன்று சேர்ந்து, அரசு பஸ் டிரைவருக்கு தர்மஅடி கொடுத்தனர்.
விழுப்புரம்:
விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் அச்சரப்பாக்கம் பகுதியை சேர்ந்த சவுந்தர்ராஜன், தனது குடும்பத்தினருடன் காரில் சென்றார். அப்போது, திண்டிவனம் புறவழிச் சாலை தீர்த்தகுளத்தில் உள்ள பெட்ரோல் பங்க் அருகே சென்ற போது, ஓசூரில் இருந்து புதுவை சென்று கொண்டிருந்த அரசு பஸ் கார் மீது மோதியது. இதில் சவுந்தர்ராஜன் தனது குடும்பத்தாருடன் வந்த கார் அருகில் இருந்த பள்ளத்தில் விழுந்து விபத்துக்குள்ளானது. இதில் காரில் சென்றவர்களுக்கு காயம் ஏற்பட்டது. இதனால் ஆத்திரமடைந்த சவுந்தர்ராஜன் மற்றும் அவரது குடும்பத்தார் ஒன்று சேர்ந்து, அரசு பஸ் டிரைவருக்கு தர்மஅடி கொடுத்தனர். பின்னர் அரசு பஸ் டிரைவரும், சவுந்தர்ராஜனும் சமாதானமாகி அங்கிருந்து சென்றனர். இதனை அவ்வழியே சென்றவர்கள் வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் பரவவிட்டனர். இது திண்டிவனம் பகுதியில் வைரலாக பரவி வருகிறது.
- அங்காளம்மன்கோவிலுக்கு நேற்று நள்ளிரவில் மர்ம நபர் ஒருவர் வந்தார்.
- பொதுமக்களிடமிருந்து வாலிபரை மீட்டு சிகிச்சை க்காக விருத்தாசலம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.
கடலூர்:
விருத்தாசலம் காட்டுகூடலூர் சாலையில் வார சந்தை உள்ளது. இந்த வார சந்தைக்கு அருகில் அங்காளம்மன்கோவில் உள்ளது. இந்நிலையில் இந்த கோவிலுக்கு நேற்று நள்ளிரவில் மர்ம நபர் ஒருவர் வந்தார். அவர் கோவிலின் கதவை உடைத்து உள்ளே சென்று கருவறையின் பூட்டை உடைத்தார். அப்போது பூட்டை உடைக்கும் சத்தம் கேட்டு அருகில் இருந்த ெபாதுமக்கள் கோவிலுக்கு வந்தனர். அப்போது அங்கு கோவில் கருவறையின் பூட்டை உடைத்த வாலிபரை பொதுமக்கள் மடக்கி பிடித்து தர்ம அடி கொடுத்தனர்.
மேலும் இதுகுறித்து விருத்தாசலம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். தகவல் அறிந்த விருத்தாசலம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பொதுமக்களிடமிருந்து வாலிபரை மீட்டு சிகிச்சை க்காக விருத்தாசலம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். மேலும் இதுகுறித்து போலீசார் விசாரணை செய்ததில் கோவிலின் பூட்டை உடைத்து திருட முயற்சி செய்த வாலிபர் சிதம்பரம் பகுதியை சேர்ந்த மணி என்பதும் தெரியவந்தது. உடனே ேபாலீசார் வழக்குபதிவு செய்து மணியை கைது செய்தனர்.
- கலையரசியை மோட்டா ர்சைக்கிளில் 2 வாலிபர்கள் பின் தொடர்ந்தனர்.
- மோட்டார் சைக்கிளுடன் வந்த மற்றொருவர் சிக்கினார்.
கடலூர்:
கடலூர் மாவட்டம் திட்டக்குடி அடுத்த கோழியூரைச் சேர்ந்தவர் கலையரசி (வயது 46). இவர் இன்று காலை 10 மணியளவில் சாலையில் நடந்து சென்றார். அப்போது இவரை மோட்டா ர்சைக்கிளில் 2 வாலிபர்கள் பின் தொடர்ந்தனர். ஆள்நடமாட்டம் இல்லாத இடத்தில் கலையரசியை வழிமறித்து, அவர் கழுத்தில் அணிந்திருந்த 2 பவுன் செயினை பறிக்க முயற்சித்தனர். அப்போது திருடன், திருடன் என கூச்சலிட்ட கலையரசி, செயினை கெட்டியாக பிடித்துக் கொண்டார். இதில் அறுத்து போன தங்க செயினின் ஒரு பகுதி திருடனின் கையில் சிக்கியது. கலையரசியின் கூச்சல் சப்தம் கேட்டு அங்கு கூடிய பொதுமக்கள் 2 வாலிபர்களையும் மடக்கி பிடித்து தர்ம அடி கொடுத்தனர்.
இதில் ஒரு வாலிபர் தப்பியோடி விட்டார். மோட்டார் சைக்கிளுடன் வந்த மற்றொருவர் சிக்கினார். இவரை திட்டக்குடி போலீசாரிடம் பொதுமக்கள் ஒப்படைத்தனர். பொதுமக்களால் ஒப்படைக்கப்பட்ட வாலிபரை கைது செய்த போலீசார் விசாரணை மேற்கொண்டனர். இதில் அரியலூர் மாவட்டம் வடுகபாளையம் கிராமத்தைச் சேர்ந்தவர் சக்திவேல் என்பது தெரியவந்தது. மேலும், தப்பியோடிய வாலிபர் யார் என்பது குறித்தும் திட்டக்குடி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். பட்டப்பகலில் சாலையில் நடந்து சென்ற பெண்ணிடம் தங்க செயினை பறிக்க முயன்ற வாலிபர்களை பொதுமக்கள் பிடித்து தர்ம அடி கொடுத்து போலீசாரிடம் ஒப்படைத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
- அந்த நபரை போலீசார் ஸ்டேஷனுக்கு அழைத்து சென்று விசாரணை நடத்தினர்.
- திருப்பூர், கோர்ட் ரோட்டில் இளம்பெண் ஒருவர், கணவருடன் நேற்றுமாலை நடந்து சென்றார்.
திருப்பூர்:
திருப்பூர், கோர்ட் ரோட்டில் இளம்பெண் ஒருவர், கணவருடன் நேற்றுமாலை நடந்து சென்றார். அங்கு ரோட்டில் வலம் வந்த போதை ஆசாமி ஒருவர் பெண்ணிடம் அத்துமீற முயற்சி செய்தார். ஆத்திரமடைந்த அப்பெண், அந்த நபரை பிடித்து அடி வெளுத்து எடுத்தார். இதே போல் மற்றொரு பெண்ணையும் அந்த ஆசாமி கையைப் பிடித்து இழுத்து அத்திமீறி நடந்துள்ளார்.
இதனைப்பார்த்த பொதுமக்களும் 'தர்மஅடி' கொடுத்தனர். அப்போது அந்த ஆசாமி பொதுமக்கள் பிடியிலிருந்து தப்பிக்க முயன்றார். அப்போது பொதுமக்கள் சுற்றி வளைத்தனர். தொடர்ந்து, தகவலறிந்து சென்ற வடக்கு போலீசாரிடம், நக்கலாக பேசியபடி அந்த நபர் அமர்ந்திருந்தார்.
'கூலிங் கிளாஸ்' போட்டு கொண்டு, 'நான் பாட்ஷா ரஜினி தெரியுமா' என, தலைமுடியை ஸ்டைலாக கோதி விட்டார். அந்த நபரை போலீசார் ஸ்டேஷனுக்கு அழைத்து சென்று விசாரணை நடத்தினர். அப்போது அந்த நபர் போதையின் இருப்பதும் லேசான மனநிலை பாதிக்கப்ப ட்டிருப்பதும் தெரியவந்தது இதனையடுத்து திருப்பூர் அரசு ஆஸ்பத்திரியில் அவரை சிகிச்சைக்காக சேர்த்தனர்.
- தனது வீட்டிற்கு வந்து பார்த்த போது வீட்டின் கதவு உடைக்கப் பட்டு இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
- வீட்டில் கைவரிசை காட்டிய மர்ம நபரை வலைவீசி தேடிவந்தனர்.
கள்ளக்குறிச்சி:
கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே இந்திலி கிராமத்தை சேர்ந்தவர் நரேஷ் (வயது 36) எலக்ட்ரீசியன். இந்நிலையில் சம்பவத்தன்று இரவு நரேஷ் தனது வீட்டை பூட்டிவிட்டு இந்திலி காந்தி நகரில் உள்ள தனது மாமியார் வீட்டிற்கு சென்றுவிட்டு பின்னர் மறுநாள் காலை தனது வீட்டிற்கு வந்து பார்த்த போது வீட்டின் கதவு உடைக்கப் பட்டு இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். வீட்டில் உள்ளே சென்று பார்த்த போது பீரோ உடைக்கப் பட்டு பீரோவிலிருந்த 9 பவுன் நகை, ரூ.10,000 ரொக்க பணம் மேலும் வீட்டிலிருந்த 40 இன்ச் எல் இ டி டிவி ஆகியவை மர்ம நபரால் திருடி சென்றிருப்பது தெரியவந்தது. இதனையடுத்து நரேஷ் இதுகுறித்து சின்னசேலம் போலீஸ் நிலையத்தில் புகார் தெரிவித்தார்.
புகாரின் பேரில் சின்ன சேலம் ேபாலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று திருட்டு நடந்த வீட்டை பார்வையிட்டனர். மேலும் போலீ சார் வழக்கு பதிவு செய்து வீட்டில் கைவரிசை காட்டிய மர்ம நபரை வலைவீசி தேடிவந்தனர். இந்நிலையில் நேற்று முன்தினம் சின்னசேலம் ஏரிக்கரை அருகே உள்ள ஒருவர் வீட்டில் திருட முயன்ற வாலிபரை அப்பகுதியிலுள்ள ெபாதுமக்கள் பிடித்து தர்ம அடி கொடுத்தனர். பின்னர் சின்னசேலம் போலீ சாரிடம் ஒப்ப டைத்தனர். போலீசார் அந்த வாலிபரை விசாரித்த போது நயினார் பாளையத்தை சேர்ந்த சின்னையன் என்பதும் இந்திலியில் நரேஷ் வீட்டில் திருடியதும் தெரிய வந்தது. உடனே பேலீசார் சின்னையனை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.
- பொதுமக்கள் கட்டி வைத்து தாக்கினர்
- புகாரின் பேரில் இரணியல் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை
நாகர்கோவில்:
நாகர்கோவில் சரலூர் பகுதியில் உள்ள தனியார் வங்கி ஒன்றில் நேற்று வாலிபர் ஒருவர் நகைகளை அடகு வைக்க வந்தார். அவர்தான் வைத்திருந்த நகைகளை வங்கியில் கொடுத்து பணம் கேட்டுள்ளார்.
இதையடுத்து வங்கி ஊழியர்கள் அவர் கொடுத்த நகையை பரிசோதனை செய்து பார்த்தபோது கவரிங் நகை என தெரியவந்தது.
இதையடுத்து ஊழியர்கள் பணம் கொடுக்கவில்லை. உடனே நகை கொடுத்த வாலிபர் வங்கி ஊழியர்க ளிடம் தகராறில் ஈடுபட்டார். அப்போது அந்த பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் அங்கு திரண்டனர்.
அவர்கள் வங்கி ஊழி யர்களிடம் தகராறில் ஈடுபட்ட வாலிபரை பிடித்து தர்ம அடி கொடுத்தனர்.மேலும் அந்த பகுதியில் கட்டி வைத்து சரமாரியாக தாக்கினார்கள்.பின்னர் கோட்டார் போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து விசாரணை மேற்கொண்டனர்.
பொதுமக்கள் பிடியில் இருந்த அந்த வாலிபரை மீட்டனர். மீட்கப்பட்ட வாலிபரிடம் விசாரணை நடத்திய போது அவர் கேரள மாநிலத்தை சேர்ந்தவர் என்பது தெரிய வந்தது. பொதுமக்கள் தாக்கியதில் அவருக்கு காயம் ஏற்பட்டிருந்ததையடுத்து அவரை சிகிச்சைக்காக ஆசாரிப்பள்ளம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
சுங்கான்கடை அடுத்த களியங்காடு பகுதியை சேர்ந்தவர் சிதம்பரம் (வயது 44). இவர் பரசேரியில் தனியார் பள்ளிக்கூடம் மற்றும் நகை அடகு பிடிக்கும் கடை நடத்தி வருகிறார்.
இந்த நிலையில் கடந்த 6-ந்தேதி காலை நகை அடகு பிடிக்கும் கடைக்கு வந்த சுமார் 50 வயது மதிக்கத்தக்க ஆண் நபர் நகை அடகு வைக்க வேண்டும் என கூறியுள்ளார். அப்போது பணியில் இருந்த ஐஸ்வர்யா அவர் கொடுத்த சுமார் 20 கிராம் எடை கொண்ட நகையை பெற்றுக் கொண்டு ரூ.70 ஆயிரம் கொடுத்துள்ளார். பின்னர் அந்த நபரின் நடத்தையில் சந்தேகமடைந்த ஐஸ்வர்யா நகைகளை சோதனை செய்துள்ளார். அப்போது அந்த நபர் கொடுத்த நகை மற்றும் முகவரி போலி என தெரியவந்தது. இதுகுறித்து சிதம்பரம் இரணியல் போலீசில் புகார் அளித்தார்.
புகாரின் பேரில் இரணியல் போலீசார் வழக்குப்பதிவு செய்து போலி நகைகள் வைத்து ஏமாற்றிய மர்ம நபரை தேடி வருகின்றனர்.
- அரசூரில் இளம்பெண்ணிடம் தவறாக நடக்க முயன்ற வாலிபருக்கு பொதுமக்கள் தர்ம அடி கொடுத்தனர்.
- அப்பு என்கிற அய்யனார் (25) என்பவர் சித்ராவை கட்டிபிடித்து தவறாக நடக்க முயன்றுள்ளார்.
விழுப்புரம்:
திருவெண்ணைநல்லூர் அருகே உள்ள அரசூர் ரோடு தெருவைச் ேசர்ந்தவர் முருகன் மகள் சித்ரா (வயது 17) இவரது தாய் ராமாயி. இவர் தாய் அரசூரில் மீன் கடை வைத்து வியாபாரம் செய்கின்றார். சித்ரா அவரது அம்மாவுடன் சேர்ந்து வியாபாரம் செய்து வருகின்றார். இந்நிலையில் நேற்று மாலை கடையில் இருக்கும்போது பண்ருட்டி திருவதிகை கிராமத்தைச் சேர்ந்த சுந்தரமூர்த்தி மகன் அப்பு என்கிற அய்யனார் (25) என்பவர் சித்ராவை கட்டிபிடித்து தவறாக நடக்க முயன்றுள்ளார். இதனால் அதிர்ச்சிய டைந்த சித்ரா கூச்சல் போட்டார். உடனே அங்கிருந்த பொதுமக்கள் அய்யனாரை பிடித்து தர்ம அடி கொடுத்து அரசூர் போலீஸ் நிலையத்தில் ஒப்ப டைத்தனர். தகவலறிந்து வந்த திருவெண்ணைநல்லூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் செல்வகுமார் மற்றும் போலீசார் அப்புவை முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். அங்கு அய்யனார் சிகிச்சை பெற்று வருகின்றார். சம்பவத்தால் இப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது
- மர்ம நபர்கள் மோட்டார் சைக்கிளை திருடி சென்றது தெரியவந்தது
- 108 ஆம்புலன்சில் கொண்டு செல்லும் வழியில் அந்த வாலிபர் வாகனத்தை நிறுத்த விட்டால் கீழே குதித்து விடுவதாக மிரட்டினார்
நாகர்கோவில்:
நாகர்கோவில் பகுதியைச் சேர்ந்த ஒருவர் தனது மோட்டார் சைக்கிளை பீச் ரோடு பகுதியில் நிறுத்தி விட்டு கடைக்கு சென்றார்.சிறிது நேரம் கழித்து வந்து பார்த்தபோது மோட்டார் சைக்கிள் மாயமாகி இருந்தது.
அக்கம்பக்கத்தில் தேடிப்பார்த்த போது மோட்டார் சைக்கிள் கிடைக்கவில்லை. மர்ம நபர்கள் மோட்டார் சைக்கிளை திருடி சென்றது தெரியவந்தது. இது குறித்து போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் இது தொடர்பாக விசாரணை மேற்கொண்டு வந்தனர்.
இந்த நிலையில் நேற்று இரவு திருடப்பட்ட அதே இடத்தில் தனது மோட்டார் சைக்கிளை நம்பர் பிளேட் மாற்றி வைத்திருந்ததை பார்த்த உரிமையாளர் அதிர்ச்சி அடைந்தார். இதையடுத்து மோட்டார் சைக்கிள் கொள்ளையனை பிடிக்க அவர் முடிவு செய்து மோட்டார் சைக்கிள் அருகே நின்று கொண்டிருந்தார்.
அப்போது அங்கு வந்த வாலிபர் ஒருவர் மோட்டார் சைக்கிளை எடுக்க முயன்றார். இதையடுத்து மோட்டர் சைக்கிள் உரிமையாளர் அந்த வாலிபரை பிடித்து திருடன்... திருடன்... என கூச்சலிட்டார். இதையடுத்து அங்கு கூடியிருந்த பொது மக்கள் அந்த வாலிபரை பிடித்து சரமாரியாக தாக்கினார்கள்.
பின்னர் கொள்ளையன் பிடிபட்டது குறித்து போலீசுக்கு தகவல் தெரி விக்கப்பட்டது. போலீ சார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பொது மக்கள் பிடியிலிருந்த கொள்ளையனை மீட்டனர். மீட்கப்பட்ட நபருக்கு பொதுமக்கள் தாக்கியதில் உடலில் காயங்கள் ஏற்பட்டி ருந்தது. பிடிபட்ட வாலிபர் இடலாக்குடி பகுதியைச் சேர்ந்தவர் என்பது தெரிய வந்துள்ளது.
இதையடுத்து போலீசார் அவரை ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்க 108 ஆம்புலன்சில் கொண்டு சென்றனர். செல்லும் வழியில் அந்த வாலிபர் வாகனத்தை நிறுத்த விட்டால் கீழே குதித்து விடுவதாக மிரட்டினார். உடனே டிரைவர் 108 ஆம்புலன்சை நிறுத்தினார். ஆம்புலன்சில் இருந்து இறங்கி தப்பிச் சென்று விட்டார். அவரை தேடும் பணியில் போலீசார் ஈடுபட்டுள்ளனர்.
- ஜெயந்தியை தாக்கி அவர் அணிந்திருந்த செயினை பறித்துக் கொண்டு தப்ப முயன்றார்.
- செல்வமுருகன் மீது கோவையில் திருட்டு உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் உள்ளன.
சாத்தான்குளம்:
சாத்தான்குளம் அருகே உள்ள பெருமாள்குளம் சந்தை தெருவை சேர்ந்தவர் ராஜகுமரன் மனைவி ஜெயந்தி (வயது 40).
இவர் மாலை அப்பகுதியில் உள்ள பொது குழாயில் தண்ணீர் பிடிக்க சென்றுள்ளார். அப்போது அங்குவந்த அதே பகுதி மேலத் தெருவை சேர்ந்த செல்வமுருகன்(32) என்பவர் ஜெயந்தியை தாக்கி அவர் அணிந்திருந்த 11 பவுன்செயினை பறித்துக் கொண்டு தப்ப முயன்றார்.
இதனைக் கண்ட அப்பகுதி மக்கள், நகை பறிப்பில் ஈடுபட்ட செல்வமுருகனைமடக்கி பிடித்து தர்ம அடி கொடுத்தனர். இதில் அவர் காயம் அடைந்ததையடுத்து, பொதுமக்களே அவரை நெல்லை அரசு மருத்துவமனையில் சிகிச்சை அனுமதித்துள்ளனர்.
இது குறித்த புகாரின் பேரில் சாத்தான்குளம் இன்ஸ்பெக்டர் பாஸ்கரன் வழக்குபதிந்து செல்வமுருகன் குறித்து விசாரணை நடத்தியதில் அவரது சொந்த ஊர் விளத்திகுளம் அருகே வேம்பார் எனவும், அவர் மீது கோவையில் திருட்டு உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் உள்ளன எனவும் கூறி உள்ளார்.
மேலும் பெருமாள்குளத்தில் திருமணமாகி கடந்த 3 ஆண்டாக பெருமாள்குளத்தில் இருந்து சந்தை வியாபாரத்துக்கு சென்று வருவதும், தற்போது மீண்டும் திருட்டில் ஈடுபட்டதும் தெரியவந்தது. இதுகுறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- கார் பழுது செய்வது தொடர்பாக வாலிபர்கள் மற்றும் ஒர்க்ஷாப் ஊழியர்கள் வாக்குவாதம்
- இதில் ஆத்திரமடைந்த வாலிபர்கள் மதுபாட்டிலை சாலையில் வீசி ரகளையில் ஈடுபட்டனர்
வடமதுரை:
அய்யலூர் -திண்டுக்கல் சாலையில் ஒர்க்ஷாப் உள்ளது. இங்கு திருச்சியை சேர்ந்த வாலிபர்கள் வாகனத்தை பழுது பார்க்க விட்டு சென்றனர். பின்னர் வாகனத்தை திரும்ப பெற்று அதற்கு கட்டணமாக ரூ.9 ஆயிரத்தை செலுத்தி சென்றனர்.
அங்குள்ள மது கடைக்கு சென்று விட்டு திரும்பி வந்த வாலிபர்கள் பழுது நீக்குவதற்கு கூடுதல் கட்டணம் வசூலித்ததாக கூறி ஒர்க்ஷாப்பில் வேலை பார்த்தவர்களுடன் தகராறில் ஈடுபட்டனர். பின்னர் மது பாட்டிலை சாலையில் வீசி ரகளையில் ஈடுபட்டனர்.
இதை பார்த்ததும் அப்பகுதி பொதுமக்கள் ஒன்று கூடினர். அவர்கள் வாலிபர்களை அங்கிருந்து செல்லும்படி கூறினர். ஆனால் தொடர்ந்து ரகளையில் ஈடுபட்டதால் வாலிபர்களை பிடித்து தர்ம அடி கொடுத்தனர்.
பின்னர் அங்கிருந்து திண்டுக்கல் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். ரகளையில் ஈடுபட்டது திருச்சி தில்லைநகரை சேர்ந்த ஜனார்த்தனன், சின்னமணி, சுரேஷ் என தெரிய வந்தது. இது குறித்து வடமதுரை போலீசார் விசாரித்து வருகின்றனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்